Karuveli, Thiruvarur District, Tamilnadu

அருள்மிகு ஸர்வாங்கசுந்தரி சமேத ஸர்குணேஸ்வரர் ஸ்வாமி ஆலயம்
                                         கருவிலி  (ஸர்குணேஸ்வரபுரம்)

கடந்த நான்கு வருடங்களாக நவராத்திரியின் போது கொலு பொம்மைகள் வைக்கப்பட்டு விழா சிறப்பாக நடந்து வருகிறது. கடந்த ஆண்டு உற்சவ அம்பாளுக்கு தினசரி வெவ்வேறு அலங்காரங்கள் செய்யப்பெற்று விஜயதசமி அன்று லட்சார்ச்சனையும் நடந்தேறியது.

அதைப்போன்று இந்த வருடமும் புரட்டாசித் திங்கள் 9ஆம் தேதி (26 09 2022)திங்கட்கிழமை முதல்17ஆம் தேதி( 04 10 2022)செவ்வாய்க்கிழமை
வரை கொலு பொம்மைகள் வைக்கப் பட்டு நவராத்திரி விழா நடைபெற இருக்கிறது.

புரட்டாசி திங்கள் 18ஆம் தேதி (05-10-2022) புதன் கிழமை லட்சார்ச்சனையும் நடைபெற இருக்கிறது.

அதன்படி உற்சவ அம்பாளுக்கு கீழ் கண்ட முறையில் தினசரி அலங்காரம் செய்வதாக உள்ளது.

26 09 2022                பத்மாவதியார்
27 09 2022                சிவபூஜை (அம்பாள்)
28 09 2022                பெருமாள்
29 09 2022                சயனபெருமாள்
30 09 2022                ராஜராஜேஸ்வரி
01 10 2022                முருகப்பெருமான்  வேல்வாங்குதல்
02 10 2022                வள்ளி தேவசேனா முருகன்             

03 10 2022                சரஸ்வதி

04 10 2022                மகிஷாசுரமர்தனி                                                            


நிகழ்ச்சி நிரலில் உள்ள காலங்களில்
நடைபெறும் விழாக்களில் பக்தகோடிகள் அனைவரும் கலந்துக் கொண்டு அருள்மிகு ஸர்வாங்க சுந்தரி அம்பாள் அருள்மிகு ஸர்குணேஸ்வர ஸ்வாமி திருவருளைப் பெற்று தங்கள் இஷ்ட சித்திகளை அடைந்து மகிழ்வுறும் படி
கேட்டுக்கொள்கிறோம்.


ஸ்ரீஸர்குணேஸ்வரர் சேவா ட்ரஸ்ட்       ஸர்குணேஸ்வரர் கைங்கர்யசபா
சென்னை.                                                       கும்பகோணம்