Karuveli, Thiruvarur District, Tamilnadu

ஸ்ரீ தா.வே.அனந்தராம சேஷன் இந்து நாளிதழ்களில் 22 வருடங்கள் உதவி ஆசிரியராக பணிபுரிந்தவர். அவருடைய இஷ்ட தெய்வம் முக்கடலும் சந்திக்கும் இடத்தில் உள்ள பகவதி கன்னியாகுமரி. மந்திர ஜபத்தால் ஈர்க்கப்பட்டு கன்னியாகுமரி ஒவ்வொரு இரவும் மணி 11.00 மணி முதல் 1.30 மணி வரை சாக்தம் பற்றி விளக்கி வருகிறாள். அவளுடைய அருளால் அமேரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா முதலிய கண்டங்களில் அவர் குமாரியை ஜோதிர் பாலாவாக பிரதிஷ்டை செய்திருக்கிறார். தமிழ்நாட்டில் மீனம்பாக்கத்திற்கு அருகில் உள்ள நங்கை நல்லூரில் உத்திர குருவாயூரப்பனை பிரதிஷ்டை செய்துள்ளார். சமீபத்தில் வருட குடமுழுக்குக்கு அழைத்துச் சென்றனர். அங்கே அபிஷேகத்தை பார்த்துக் கொண்டிருந்தபோது சுப்ரபாத செய்யுள்கள் அவள் அருளால் இயற்ற முடிந்தது. சென்னை திரும்பிய பிறகு இரண்டு இரவுகளில் அத்திருக்கோயிலின் வரலாறு பற்றிய இதுவரை அறிந்திராத உண்மைகளைத் தேவி அவருக்கு உணர்த்தினாள்.

கருவேலி கிராமத்தில் புதுப்பிக்கப்பட்டு விளங்கும் ஸ்ரீ சர்குணேஸ்வரர் கோவிலுக்கு வர வேண்டும் என்ற அழைப்பை ஏற்றுக்கொண்டு என் வழக்கப்படி என் அபிமான தேவதையின் அனுமதிக்காக அவளை தியானித்தேன்.  முக்கடல் பாதங்களை வருடக் குமாரி முனையில் கோயில் கொண்டுள்ள அக் குமாரரி பிரத்யட்சமாகி கருவேலிக் கோயிலைப் பற்றி ஒரு பெரும் வரலாற்றினையே அளித்தாள்.

கருவேலி இன்று நேற்று தோன்றிய கோயிலென்று. திட்டமாக 3500 வருடங்களுக்கு முன் இக்கோயில் அத்ரி, கச்யபர் அனுக்ரஹம் பெற்ற ஒரு அந்தணரின் தவ வலிமையால் தோன்றியது. மனத்துள்ளே கண்டபடி குறிப்பிடப்பட்ட அளவுகளின்படி மதில்கள், பிரகாரம், கருவறை முதலியவைகளை அவர் ஊரார் ஒத்துழைப்புடன் அமைத்தார். வேதம் முற்றுணர்ந்த அவர் வித்யாநாதன் என்றே அழைக்கப்பட்டார்.

குமாரி கண்முன் அக்கோயிலையே அக்காலத்தில் இருந்தபடி கொண்டு நிறுத்தினாள். கோயில் மதில்கள் வட்ட வடிவத்தில் இருந்தன. இப்போதுள்ள கோவிலின் வெளி மதிலிலிருந்து ஒவ்வொரு நடுவிலிருந்தும் ஒரு 24 அடி லம்பம் வரைந்து அவற்றின் முனைகளை வட்ட வடிவில் இணைத்தால் அதுவே அன்றைய கோயிலின் வெளிப் பிரமாணம். கோயிலுக்கு நான்குபுறமும் ராஜகோபுரம், மூலஸ்தான விமானம் கஜப்ருஷ்டம் என்ற அமைப்பில் இருந்தது.

பிரதிஷ்டை ஷடாதாரம். ஒவ்வொரு ஆதாரத்திற்கும் இடையில் தங்கம், வெள்ளி, நவரத்தினங்கள் மணலுக்கு மேல் இருந்தன. ஆதார லிங்கத்தின் பீடத்தின் ஆதாரம் குமாரியின் கூற்றின்படி தாந்த்ரத்திலிருந்து வேறுபட்ட வைதீக ஷடாதர பிரதிஷ்டை ஒழுங்குமுறையைச் சார்ந்து இருந்தது. ஒவ்வொரு ஆதாரத்திலும் பஞ்சாட்சரத்தின் ஒரு எழுத்து. மேல் பீடத்தில் அக்னி ஜ்வாலை போன்று செதுக்கப்பட்ட வடிவத்தின் நடுவே பஞ்சாட்சர ஆரம்ப பீஜமான ப்ரணவம்.

இது அதோமுக மந்த்ர விந்யாஸம் எனப்படும். கோயிலே மண்மூடி மறந்தாலும், தெய்வத்தின் சைதன்யம் அணுவளவுகூட மங்காது. இதுவே அதோமுக வின்யாஸத்தின் சக்தியாகும். 3500 வருடங்களாக இப்படியேதான் இருந்து வருகிறது. குமாரியின் கூற்றுப்படி இந்த வின்யாஸத்தில் பிரதிஷ்டையாகியுள்ள பரமேஷ்வரனை தரிசிப்பதாலேயே மாசுகள் அகலும். துயர்கள் ஒழியும். செல்வம் கொழிக்கும். மோட்சம் கிட்டும். மோட்சம் அடையும்வரை கவலைகளற்ற வாழ்வு கிட்டும்.

ஸர்வாங்கசந்தரி பராசக்தியே. சிவனின் ஒரு பாகமாகத் திகழ்பவள். அன்றே தனியாகக் கோயில் கொண்டவள். அவளை எங்கிருந்து நினைத்தாலும், அவள் அருள் கிட்டும். அழகும், அருளும் அவளுடைய இணைபிரியாத தகைமைகள்.

அக்காலத்தில் கோயிலைச் சுற்றி ரம்யமான சோலையும் கோயிலின் ஈசான்ய பாகத்தில் புஷ்காரணியும் இருந்தது. கோயிலுக்கும் சோலைக்கும் வெளியே மாலைபோல் நதி ஒன்றும் ஓடிக் கொண்டிருந்தது.

கோயில் வட்ட வடிவம், அதைச் சுற்றியுள்ள வட்ட வடிவம். அதற்கு அப்பால் உள்ள பெருவட்டத்தில் ஐந்து அக்ராஹாரங்கள் இருந்தன. கோயில் இருந்த இடம் இரத்தின பூமி. மஹாஸர்ப்பங்கள் மனிதர்கள் கண்ணுக்கு தெரியாமல் க்ஷேத்ரத்தின் காவலர்களாகப் பணி புரிந்தன.

கோயில் க்ஷீணதசையடைந்தபோது ஸர்ப்பங்கள் கன்னுக்குத் தெரிந்தே சஞ்சரித்தன. வயது ஆக ஆக ஸர்ப்பங்களின் உடல் குறுகி, பெருக்கும். படம் பெரிதாக விரியும். அப்படிப்பட்ட ஸர்ப்பம் ஒன்றை இப்போது திருப்பணி செய்யும்போது கண்டதாகக் கூறுவது இதற்குச் சான்று.

தென்னாட்டின் தொன்மையான அழியாத சைதன்யம் உள்ள பரமேச்வரனின் திருக்கோயில்களில் கருவேலி கோயிலும் உண்டு. மற்றவை பஞ்சபூதங்களான காஞ்சி, காளஹஸ்தி, ஜம்புகேசுவரம், திருவண்ணாமலை, சிதம்பரம் இதைத்தவிர சொக்கநாதர் உறையும் மதுரை ஆலயம்.

பல கோயில்கள் உள்ள கும்பகோணத்திலிருந்து 20 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கருவேலிக் கோயிலுக்குச் சென்று வழிபடுவதால் கும்பகோணத்தில் உள்ள எல்லாக் கோயில்களையும் தரிசித்த பலன் கிட்டும். கொடுப்பினை உள்ளவர்கள் சற்குணநாதனை தரிசிப்பீர், இப்பேற்றினைப் பெறுவர் என்று நான் கூறவில்லை. குமாரி கூறுகிறாள்.