ஸ்ரீ ஞானஸ்கந்த பகவான்
“சர்வசக்திஸ் வரூபே சர்வாங்கசந்தரி
சர்வசத்ரு சாம் ஹாரிணி ஜகத்காரிணி ஜனநி பாஹிமாம்
ஞானஸ்கந்த பீட நிவாஸிநி ஞானந்தமயி
சர்குணேச்வர ப்ரியே ரக்ஷமாம் ரக்ஷமாம்”
“ஓம் சக்தி சுபம்”
தேவிஸ்துதி
மதுர சரஸவாணி பசுவதி நின்
மதுரகானம் சுபநிதி
மாமதுரை நின்ற குணவதி
ஞானசம்பந்தன் தாயே ஹே பார்வதி
தாயன்பு குறையா நின் கருணை திரு
ஞான சம்பந்தனுக்களித்த பெருமை திரு
ஞானஸ் கந்தனோடு நீ செய்யும் புதுமை
யாரறிவார் இந்தப்புவியில் உன் அருமை
மங்கள மாங்கல்ய மகிழ்ச்சி தரவா!
சந்ததியை உன் திதியில் அள்ளித் தரவா!
எந்தையும் என் தாயு மானவளே என்
சிந்தையில் எந்நாளும் நின்றருளே